பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக நேத்ரோதயா என்ற அமைப்பு 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தற்போதைய விலைவாசியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ரூபாய், 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு பதில், அவற்றை நிறுத்திவிடலாம்... விரிவாக படிக்க >>