தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன?
தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன? கடந்த காலாண்டில் மட்டும் தங்கம் விலையானது 5% மேலாக அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த செப்டம்பர் 2020க்கு பிறகு மிகப்பெரிய ஏற்றமாக பார்க்கப்படுகின்றது. எனினும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தையில் சில உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது விரைவில் சுமூக நிலை எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்காவின் மத்திய வங்கியானது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சில தினங்களாக பத்திர சந்தையானது சரிவில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம். மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் இது தங்கத்தின் விலையில் ஏற்படும் அதிக ஏற்றத்தினை தடுக்கலாம். பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் என்பதால் தங்கம் விலையானது சரிவில் காண...