சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் பன்னீர்செல்வம் - வேளாண் துறைக்கு ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு: சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கம் பயிர்க் காப்பீட்டுக்கான மாநில அரசு பங்களிப்பு ரூ.2,339 கோடி
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் பன்னீர்செல்வம் - வேளாண் துறைக்கு ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு: சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கம் பயிர்க் காப்பீட்டுக்கான மாநில அரசு பங்களிப்பு ரூ.2,339 கோடி சட்டப்பேரவையில் 2-வது ஆண்டாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கு ரூ.33,007 கோடியும், பயிர்க் காப்பீட்டு மானியத்துக்கு ரூ.2,339 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் மேம்பாட்டுத் திட்டம்,சிறுதானிய சிறப்பு மண்டலம் உருவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அரசின் முழுமையான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டும் காகிதமில்லாத இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது: உழவர் உள்ளத்தையும் வறியோர் வயிற்றில் உள்ள பள்ளத்தையும...