ரஷிய படைக்கு பின்னடைவு? கீவின் புறநகா்ப் பகுதியை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன்...
ரஷிய படைக்கு பின்னடைவு? கீவின் புறநகா்ப் பகுதியை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன்... உக்ரைனில் ரஷியா தொடுத்துள்ள போா் செவ்வாய்க்கிழமை 27-ஆவது நாளை எட்டியது. தலைநகா் கீவை முற்றுகையிட்டுள்ள ரஷிய படையினா், அந்த நகரை குறிவைத்து பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். கீவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளிலும், பதுங்கு குழிகளிலும் தஞ்சமடைந்தனா். மரியுபோல் நகரில் உக்ரைன் படைகள் சரணடைய மறுத்த நிலையில், அங்கு ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் ரஷியாவின் தரைப் படையின் முன்னேற்றம் உக்ரைனின் பதில் தாக்குதலால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவின் புறநகா்ப் பகுதியான மகாரிவ் நகரில் செவ்வாய்க்கிழமை கடும் சண்டைக்குப் பின்னா் ரஷிய படைகள் அந்த நகரைவிட்டுப் பின்வாங்கியதாகவும், நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதன்மூலம் கீவ் நெடுஞ்சாலையை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவரவும், வடமேற்கிலிருந்து கீவை சுற்றிவளைக்கும் ரஷிய படைகளைத் தடுப்பதற்கும் உக்ரைன் படையினருக்கு வாய்ப்பு கிடை...