NEET – UG தேர்வு தேதி அறிவிப்பு
NEET – UG தேர்வு தேதி அறிவிப்பு நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET - UG தேர்வு ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2) முதல் மே 7-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், கடந்தாண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.