பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிபதிலளித்துள்ளார். கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முழுவதுமாக காணொளி காட்சியிலேயே சென்ற நிலையில் இந்த ஆண்டு பரவல் கொஞ்சம் மட்டுப்பட்டதால் சில மாதங்களுக்கு முன்னர் நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆனாலும் மாணவர்கள் மனதளவில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டனர். அதற்குள் கனமழை, வெள்ளம் ஏற்பட மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அது முடிந்த பின்னர் கொரோனா மூன்றாவது அலை உருவாகி மீண்டும் பள்ளிக்கூட கதவுகள் அடைக்கப்பட்டன. இதனால் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இம்முறை கட்டாயம் தேர்வை நடத்திவிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக இருந்தது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டத...