க்யூட் தேர்வின் இரண்டாம் கட்ட தேர்வு, ஒத்திவைப்பு! மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் இரண்டாம் கட்ட தேர்வு, ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்நுட்ப பிரச்னைகளால் கேள்வித் தாள்களை பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் 2-ஆம் கட்ட தேர்வு ஒத்தி செய்யப்படுவதாகவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டையே மாணவர்கள் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவில் 4,5,6 தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை முழுமையாக ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.