உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை! பிஞ்சுக்கைகளால் அடையாளம் காணப்பட்ட அவலம்!1487708435

உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை! பிஞ்சுக்கைகளால் அடையாளம் காணப்பட்ட அவலம்!

குஜராத்தின் சபர்கந்தா காவல்துறையினர், நேற்று காலை மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை கண்டெடுத்துள்ளனர். கம்போய் கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் மண்ணுக்குள் இருந்து குழந்தையொன்றின் அழுகை சத்தம் கேட்டிருக்கிறது. பால்மணம் மாறா அப்பிஞ்சுக்குழந்தையின் கைகள் மண்ணிலிருந்து வெளியே தெரிந்திருக்கிறது. இதைக்கண்ட அப்பகுதி விவசாயி, அப்பகுதியினரின் உதவியுடன் குழந்தையை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார். தொடர்ந்து குழந்தையை ஹிமாத்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குழந்தை மீட்பு பணியின்போது, அருகில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து அந்த விவசாயியும் மக்களும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களும் அழுகை சத்தம் கேட்கும் இடத்திற்கு சென்று மக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட பின்னர், அக்குழந்தை பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிருடன் குழந்தையை புதைத்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை முதலில் கண்ட விவசாயி இதுகுறித்து உள்ளூர் செய்திகளில் தெரிவிக்கையில், “வியாழக்கிழமை காலை நான் எப்போதும்போல வேலைக்காக விவசாய நிலத்துக்கு சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கு ஒரு குழந்தையின் கைகளை பார்த்தேன். உடனடியாக என் நிலத்துக்கு பக்கத்திலுள்ள மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனடியாக அனைவரும் அங்கு வரவே, எங்கள் பணி எளிதானது. குழந்தையை புதைத்தவர்கள், ஆழமாக புதைக்கவில்லை. அதன்மூலம், அவர்கள் அவசரகதியில் புதைத்து வைத்திருக்கின்றனர் என்று எங்களுக்கு தெரிந்தது. அதிகாலை நேரத்தில்தான் இந்த செய்கையில் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்றுள்ளார்.

குழந்தையின் குடும்பத்தினரும், குறிப்பாக தாயும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog