நடிகை மீனா உடல் உறுப்பு தானம் - டுவிட்டரில் உருக்கமான தகவல்!1850238206


நடிகை மீனா உடல் உறுப்பு தானம் - டுவிட்டரில் உருக்கமான தகவல்!


நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 27-ந் தேதி மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி இருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog