10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!1663078425
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்! 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்....