அடுத்த அதிர்ச்சி! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி விடுதியில் தற்கொலை!179039085
அடுத்த அதிர்ச்சி! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி விடுதியில் தற்கொலை!
திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சரளா என்ற பள்ளி மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மாணவிகளின் தற்கொலைகள், மர்ம மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையைத் தருகிறது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏராளமான மாணவ மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பள்ளியிலேயே கலந்தாய்வு வழங்க தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் சரளா என்கிற பள்ளி மாணவி, விடுதியில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
திருவள்ளூர், திருவேற்காட்டில் செண்பகா எனும் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மாணவி நேற்று , விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தற்போது வரை மாணவி எந்த காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.
அந்த மாணவி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது அறையில் இருந்த அவருடைய செல்போன் மற்றும் அவரது உடைமைகளை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அரசு உடனடியாக இது குறித்து முடிவெடுத்து, மாணவிகளுக்கு கவுன்சிலிங் போன்றவற்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
Comments
Post a Comment