Beast: விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்
Beast: விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்
பீஸ்ட் திரைப்படம் நன்றாக இல்லை என விஜய் ரசிகர் ஒருவர் நியூஸ் 18 தமிழிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் நியூஸ்18 தமிழுடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது பேசிய ரசிகர் ஒருவர் பீஸ்ட் தனக்கு ஏமாற்றமளித்ததாக தெரிவித்துள்ளார்.
படம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ரசிகர், ‘படம் அந்தளவுக்கு வரல. எதிர்பார்த்தது எதுவுமே இல்ல. பீஸ்ட்டு பீஸ்ட்டுன்னு ரொம்ப எதிர்பார்ப்போட போனோம். ஆனா அந்தளவுக்கு எதுவுமே இல்ல. தளபதி படம்னாலே கமர்ஷியலா எண்டெர்டெயின்மெண்டா இருக்கு. ஆனா இதுல எதுமே இல்ல. நெல்சன் விஜய்யை வச்சி செஞ்சிட்டாரு. முதல் பாதி பரவால, எதோ போய்டுச்சு. இரண்டாவது பாதி தான் ரொம்ப இழுத்தது. ஒரு புல்லட் கூட விஜய் மேல படல. படம் வேஸ்ட்டு, அதுக்கு நாளைக்கு கே.ஜி.எஃபே போய்டலாம் என்றார்.
விஜய் ரசிகரின் இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment