மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த கணவன்! சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள்? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமுலு - ஈது குரு தம்பதி. கடந்த சில காலமாக ஈது குரு நோய்வாய்ப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதி இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒரு வேலையாக சென்றுள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஈது குருவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், விசாகபட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அங்கு தொடர் சிகிச்சைக்கு பிறகும் உடல் நிலை தேராததால் ஈது குருவை டிஸ்சார்ஜ் செய்த சமுலு, அங்கிருந்து விஜயநகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். விஜயநகரத்திற்கு ஆட்டோவில் சமுலு மற்றும் ஈது குரு சென்றுள்ளனர். ராமாவரம் பாலத்திற்கு அருகில் ஆட்டோ சென்ற போது, ஈது குருவுக்கு உடல் நிலை மோசமாகி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. திடீரென ஈது குரு உயிரிழந்ததால் பதறிய ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் அங்கேயே இறக்கிவிட்டுத் தப்பியுள்ளார். இறந்த மனைவியை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முயன்ற சமுலு, அங்கிருந்தவர்களிட...